×
Saravana Stores

பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்கம்

 

ராமேஸ்வரம், நவ.20: ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில், அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து நிலப்பகுதியை காப்பதில் சதுப்பு நிலங்களில் உள்ள அலையாத்தி மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள பாம்பன், மண்டபம், கீழக்கரை, காரங்காடு, உப்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் உவர் நிலம் கண்டறியப்பட்டு அங்கு அலையாத்தி காடுகள் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பணிகள் வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் தீவில் அருளகம் இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் உதவியுடன் மணல்மேடுகள் பாதுகாப்புத் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒருபகுதியாக பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில் 1,600 அலையாத்தி கன்றுகள் நேற்று நடப்பட்டன. இதில் வனவர் சுவாமிநாதன், வனக்காப்பாளர் மணிகண்டன், வேட்டை தடுப்பு காவலர் பிரின்ஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பெண்கள் மழையும் பொருட்படுத்தாமல் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் மணல்மேடுகள் மற்றும் அலையாத்தி காடுகளைப் பேணிப் பாதுகாப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post பாம்பன் குந்துக்கால் கடற்கரை பகுதியில் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : SQUAT ,ALAIATI ,Rameshwaram ,Pampan Squat Beach ,Alaiyadi ,Bambon Squat Beach ,Dinakaran ,
× RELATED அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசின்...