×

மாவட்ட மைய நூலகத்தில் வினாடி வினா போட்டி

 

திருச்சி, நவ.20: 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து நவ. 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது. 6ம் நாளான நேற்று கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட மைய வினாடி வினா போட்டி நூலகத்தில் நடந்தது. இதில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை என்ஆர்ஐஏஸ் அகாடமி இயக்குநர் விஜயபாலன் நடத்தினார். வாசகா்் வட்ட தலைவர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார். நூலகர்கள் தர்மர், அமுதா, அபூர்வம், சரவணன், வாசகர் வட்ட நிர்வாகி வைகுண்டமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு “வாசகர்களுக்கு வாசிப்பு என்ன செய்யும்’’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் கவுஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளை 5 நிமிடங்களுக்குள் வாசிக்க வேண்டும். நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நூலக வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட மைய நூலகத்தில் வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : Competition ,District Central Library ,Trichy ,57th National Library Week ,Readers' Circle ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி