×

இன்றும், நாளையும் வண்டலூர்-மாமல்லபுரம் இடையே கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி: பொதுமக்கள் அச்சப்படவேண்டாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையம் வளாகத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு நேரத்தில் தேசிய, மாநில பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழ்நாடு காவல் துறை காவலர்கள், தாம்பரம் மாநகர காவல் ஆணையத்திற்குட்பட்ட எல்லை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்ட (வண்டலூர் முதல் மாமல்லபுரம் வரை) பகுதியில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட உள்ளனர். எனவே, மேற்படி பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் இது ஒத்திகை பயிற்சி என்பதால் இது குறித்து எவரும் பதற்றம் அடையவோ மற்றும் அச்சம் கொள்ளவோ வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post இன்றும், நாளையும் வண்டலூர்-மாமல்லபுரம் இடையே கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி: பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Vandalur-Mamallapuram ,Chengalpattu ,Kalpakkam nuclear power plant ,Chengalpattu district ,National ,State Security Force ,Tamil Nadu Police Department Constables ,Tambaram Metropolitan Police ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...