- லவர்
- ஜாக்குலின்
- மும்பை
- பெங்களூரு
- சுகேஷ் சந்திரசேகர்
- தில்லி
- மண்டோலி ஜெயில்
- பாலிவுட்
- ஜாக்குலின் பெர்னாண்டஸ்
- Sukesh
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு, டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண் டசும் உயிருக்குயிராக காதலித்து ஒரே வீட்டில் வாழ்ந்தனர். சுகேஷின் மோசடி வழக்குகளில் ஜாக்குலினும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் இருக்கும் சுகேஷ், ஜாக்குலினுக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என் அன்பே, என் பேபி ஜாக்குலின். சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் உனது நடனத் தைப் பார்த்து ரசித்தேன். நீ நேர்த்தியாக ஆடியிருந்தாய்.
நீ என்னை, மீண்டும் உன்னைக் காதலிக்கச் செய்துவிட்டாய். அதுபற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீ ஒரு சூப்பர் ஸ்டார், மை பேபி கேர்ள், என் ராணி. என் வாழ்க்கையில் நீ இருப்பது எனக்கான மிகப்பெரிய பாக்கியம். நான் உன்னைக் காதலிக்கிறேன். ஒவ்வொரு நொடியும் உன்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறேன். நான் உன்னை எவ்வளவு பைத்தியமாக நேசிக்கிறேன் என்று தெரியுமா உனக்கு? நீ என்னை எவ்வளவு பைத்தியமாக நேசிக்கிறாய் என்பது பற்றி எனக்கு
நன்றாகத் தெரியும்.
The post ஜாக்குலினுக்கு சிறையிலுள்ள காதலன் கடிதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.