×

உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தலைவரான விக்ரம் கவுடா சுட்டுக்கொலை

உடுப்பி: உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா அடுத்த ஹெப்ரி கப்வினாலேயில் நக்சல் கும்பல் பதுங்கியிருப்பதாக தனிப்பிரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த நக்சல் தடுப்பு தனிப்பிரவு போலீசாரை கண்டதும், நக்சல் கும்பல் எதிர் தாக்குதலை நடத்த முயன்றது. அப்போது நடந்த பதிலடி தாக்குதலில் நக்சல் அமைப்பின் மூத்த தளபதி விக்ரம் கவுடா என்பவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவன் சமீப நாட்களாக சிருங்கேரி, நரசிம்மராஜ புரா, கார்கலா மற்றும் உடுப்பி ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்ததாகவும், தற்போது கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் அவனை சுற்றிவளைத்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘தென்னிந்தியாவின் முக்கிய நக்சல் தளபதியான விக்ரம் கவுடா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து உடுப்பிக்கு வந்துள்ளான். அவனுடன் இருந்த முண்ட்காரு லதா, ஜெயன்னா மற்றும் வனஜாக்ஷி ஆகியோர் தப்பிவிட்டனர். கடந்த 2016ம் ஆண்டு நீலம்பூர் என்கவுன்டரில் தப்பி ஓடிய விக்ரம் கவுடா, தற்போது சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்றனர்.

The post உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தலைவரான விக்ரம் கவுடா சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Maoist ,Vikram Gowda ,Udupi ,Hebri Kapvinale ,Karkala ,Karnataka ,naxal ,force ,Dinakaran ,
× RELATED மாவோயிஸ்ட் அமைப்பு நிதியிலிருந்து...