×

திருச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 29 விற்பனையாளர், கட்டுநர் ணிக்கு நேர்முகத்தேர்வு

 

திருச்சி, நவ. 19: திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 96 விறபனையாளர்கள் மற்றும் 33 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது. தில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை திருச்சி தில்லைநகர் 5வது கிராஸில் உள்ள மக்கள் மன்றத்தில் நடக்கிறது.

நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டை இன்று (18ம் தேதி) முதல் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளம் www.drbtry.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவினர் தொலைபேசி எண் 0431 2424170 மற்றும் drpdstrichy2021@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்று திருச்சி மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணை பதிவாளரும் தலைவருமான ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 29 விற்பனையாளர், கட்டுநர் ணிக்கு நேர்முகத்தேர்வு appeared first on Dinakaran.

Tags : Trichy District ,Trichy ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் வீடுகளை அட்டகாசம் செய்யும் குரங்கு கூட்டம்