×

குட்கா பதுக்கி விற்றவர் கைது

திருச்செங்கோடு, நவ. 19: திருச்செங்கோடு நகர போலீசார், சங்ககிரி சாலையில் உள்ள மளிகை கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ₹17 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ புகையிலை பொருட்களை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். மளிகை கடையில் இருந்த தென்காசியை சேர்ந்த சைபூர் ரஹ்மான்(42) என்பவரை கைது செய்த போலீசார், அவரை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு, ரஹ்மனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். ேபாலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

The post குட்கா பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Thiruchengode ,Tiruchengode ,Sangakiri road ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED குரங்குகள் தொல்லையால் அவதி