×

சீனாவை முந்தியது அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா முதலிடம்

புதுடெல்லி: அமெரிக்க தூதரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஓபன் டோர்ஸ் அறிக்கை 2024ன் விவரம் வருமாறு: அமெரிக்காவில் 2023-23ம் கல்வியாண்டில் சர்வதேச மாணவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. ் இந்த கல்வியாண்டில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. 2022-23ம் கல்வியாண்டில், 2,68,923இந்திய மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்த கல்வியாண்டில் முன்எப்ேபாதும் இல்லாதவகையில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3,31,602 ஆக உள்ளது. இதனால் அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2024ம் ஆண்டு மொத்த சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் மட்டும் 29 சதவிகிதம் ஆகும். அதே போல் அமெரிக்காவில் இரண்டாம் ஆண்டாக சர்வதேச பட்டதாரி (முதுநிலை மற்றும் பிஎச்டி நிலை) மாணவர்களை அனுப்பிய நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இந்திய பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்து 1,96,567 ஆக உயர்ந்துள்ளது.

The post சீனாவை முந்தியது அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா முதலிடம் appeared first on Dinakaran.

Tags : India ,China ,US ,New Delhi ,US Embassy ,USA ,America ,
× RELATED தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா மலர்கள் பூத்திருச்சு