×

டெல்லி மாஜி அமைச்சர் பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் அடிசி தலைமையிலான ஆம்ஆத்மி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கைலாஷ் கெலாட். நேற்று முன்தினம் அமைச்சரவையில் இருந்தும், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார். நேற்று அவர் டெல்லி பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்று பா.ஜவில் இணைந்தார்.

புதிய அமைச்சர் தேர்வு: டெல்லி போக்குவரத்து துறை புதிய அமைச்சராக நங்லோய் தொகுதி ஆம்ஆத்மி எம்எல்ஏ ரகுவிந்தர் ஷோக்கீன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா தெரிவித்தார். இவரது நியமனத்திற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் பதவி ஏற்பு விழா நடைபெறும்.

The post டெல்லி மாஜி அமைச்சர் பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Former ,Delhi ,minister ,BJP ,New Delhi ,Kailash Gehlot ,Transport Minister ,Aam Aadmi Party ,Chief Minister ,Adisi ,Dinakaran ,
× RELATED நிதி அமைச்சரின் விளக்கத்தால்...