×

குஜிலியம்பாறை அருகே நாய் கடித்து 28 செம்மறி ஆடுகள் பலி

குஜிலியம்பாறை :குஜிலியம்பாறை அருகே நாய் கடித்து 28 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ஆர்.புதுக்கோட்டை செங்குளத்துப்பட்டி காலனி குடியிருப்பை சேர்ந்தவர் காளியப்பன்(60). இவர் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் கிடை அமைத்து 70 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கிடைக்குள் புகுந்த நாய், செம்மறி ஆடுகளை சரமாரியாக கடித்து குதறியது. இதில் 28 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் சில ஆடுகள் பலத்த காயமடைந்தன. பலியான செம்மறி ஆடுகளின் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். இது குறித்து ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோபால்சாமி கூறுகையில், ‘‘ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள 65 கிராமங்களிலும் அதிகப்படியான தெருநாய்கள் உள்ளன. பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் இந்த நாய்களால் அதிக தொந்தரவு உள்ளது. நாய் தொந்தரவு குறித்து பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் தற்போது ஒரே நேரத்தில் 28 ஆடுகள் பலியான சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்….

The post குஜிலியம்பாறை அருகே நாய் கடித்து 28 செம்மறி ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Kujiliyamaparai ,Dindigul district, R. Puthukkottai Chengulathupatti ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு