×
Saravana Stores

அதிகாரிகளை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் 26ல் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன், பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கம் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடந்த 16.5.2023 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, எங்களின் முக்கிய கோரிக்கையான, ‘இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் விதித்திருத்தம்’ விரைவில் மேற்கொள்ளப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை போராடியும் அரசு நிர்வாகம் தொடர்ந்து தாமதம் ெசய்து வருகிறது. முதல்வர் உத்தரவிட்ட பின்பும் ஒன்றரை ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்படுகிறது.

நிதி செலவினம் இல்லாத கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் அரசு உயர் அதிகாரிகள் அலட்சியம் செய்வது அதிருப்தி அளிக்கிறது. வருவாய்த்துறையில் பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வெளியிட வேண்டும். அரசு பணியில் மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் தகுதிவாய்ந்த ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் அலுவலக வாயிலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

 

The post அதிகாரிகளை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் 26ல் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Revenue Officers Association ,State President ,MP Murugayan ,General Secretary ,S. Shankaralingam ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது பொய்...