×

பஞ்சாப் மாஜி முதல்வர் படுகொலை வழக்குகருணை மனு மீது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை

புதுடெல்லி: கடந்த 1995ம் ஆண்டு அப்போதைய பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் உட்பட 16 பேர் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைதான பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிள் பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 2007ல் மரண தண்டனை விதித்தது. தனது மரண தண்டனையை குறைக்குமாறு ரஜோனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஒன்றிய அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, ஜனாதிபதியின் பரிசீலனைக்கு கருணை மனுவை அவரது செயலாளர் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். அடுத்த 2 வாரத்தில் கருணை மனு மீது முடிவெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்’’ என உத்தரவிட்டனர்.

 

The post பஞ்சாப் மாஜி முதல்வர் படுகொலை வழக்குகருணை மனு மீது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Punjab ,CM ,Supreme Court ,President ,New Delhi ,Chief Minister ,Beant Singh ,Balwant Singh Rajona ,Dinakaran ,
× RELATED இந்தியா-பாக். உறவில் அமைதி வாஜ்பாய்...