×

3 அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்பான மணிப்பூர் வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைப்பு: ஒன்றிய உள்துறை அறிவிப்பு

புதுடெல்லி: மணிப்பூரில் சமீபத்தில் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை என்ஐஏ-விடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் (சிஆர்பிஎப்), குக்கி தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையும் 10 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜிரிபாமில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதன்பின் மாநிலத்தில் நடந்த வன்முறையால் 3 அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டால், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட 3 சம்பவங்கள் ெதாடர்பாக பதியப்பட்ட வழக்குகளை அனைத்தையும் விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தற்போது தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து, இந்த 3 முக்கிய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை மணிப்பூர் காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 3 அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்பான மணிப்பூர் வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைப்பு: ஒன்றிய உள்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,NIA ,Union Home Ministry ,New Delhi ,Ministry of Home Affairs ,Central Reserve Police Force ,CRPF ,Kuki ,Jiribam ,Union Home Affairs ,Dinakaran ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...