×

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழப்பு!


நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை மிதித்து பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ’தெய்வானை’ என்ற 25 வயது பெண் யானை உள்ளது. அன்னதான மண்டபத்திற்கு அருகில் யானையைக் கட்டிப் போடும் கூடம் உள்ளது. தினமும் காலையிலும், மாலையிலும் திருக்கோயிலின் பிராகாரங்களில் தெய்வானை யானை சுற்றி வருவது வழக்கம்.

கோயில் யானை தெய்வானைக்கு அவ்வப்போது பழங்கள், உணவு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மதியம் 3 மணி அளவில் யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆக்ரோஷத்துடன் யானை தாக்கியது. யானைக்கு பழம் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆக்கேராஷத்துடன் திமிறிய யானை 2 பேரையும் தாக்கியது. யானை தாக்கியதில் சிசுபாலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் பாகன் உதயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யானைப்பாகன் சொந்த ஊர் குமரி மாவட்டம் களியக்காவிளை. யானையை தற்போது கோவில் ஊழியர்கள் கண்காணித்து வருவதாகவும், யானை மீது தண்ணீர் அடிக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Pagan ,Trinchendoor temple ,Pagan Udayakumar ,Sisubalan ,Tiruchendur Murugan temple ,Murugabh ,Peruman ,Arulmigu Subramaniya Swami Temple ,Thiruchendur ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் கோயில் யானையை நேரில்...