×

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சென்னை கோர்ட் நீதிபதி நியமனம்

டெல்லி: மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தார் மிருதுல் பணியாற்றி வரும் நிலையில், அவர் வரும் 21ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அதனால் மணிப்பூர் மாநில அடுத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண குமாரை, மணிப்பூர் மாநிலத்தின் அடுத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டது.

இதுதொடர்பான அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஒப்புதலையடுத்து மணிப்பூர் மாநில அடுத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிருஷ்ண குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த சில நாட்களில் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சென்னை கோர்ட் நீதிபதி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Madras Court ,Chief Justice ,Manipur High Court ,Delhi ,Sidhar Mridul ,Chief Justice of ,Manipur State High Court ,Manipur ,State ,Chennai Court ,Dinakaran ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...