×

ஓபிலி என்.கிருஷ்ணா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தை இயக்கிய ஓபிலி என்.கிருஷ்ணாவுடன் தனது புதிய படத்தை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்நிறுவனம் தமிழில் வெளியான ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘ஹே சினாமிகா’. இந்தியில் வெளியான ‘அலோன்’ உள்பட பல படங்களை தயாரித்துள்ளது. புதிய படம் குறித்து ஓபிலி என்.கிருஷ்ணா கூறுகையில், ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல கதைகளைப் பற்றி நாங்கள் விவாதித்து, ஒரு தனித்துவமான கதையை மட்டும் தேர்வு செய்துள்ளோம். எங்கள் புதிய முயற்சி ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய சினிமா அனுபவத்தை வழங்கும்’ என்றார். அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஓபிலி என்.கிருஷ்ணா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : AR Rahman ,Obili N. Krishna ,CHENNAI ,Global One Studios ,Simbu ,Opili N.Krishna. ,Ophili N. Krishna ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மீண்டும் வெளியாகும் ‘முத்து’