×

மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் 2 கோடீஸ்வரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி : மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் 2 கோடீஸ்வரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, விவசாயிகள், ஏழைகள், வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களின் தேவை ஆகியவை குறித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சிந்தித்து வருகிறது என்று கூறினார். தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு மிக பெரிய பிரச்சனையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மராட்டியத்தில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார். மேலும் மகளிரின் வங்கிக்கணக்கில் மாதம் தோறும் ரூ. 3000 செலுத்தப்படும், ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும், விவசாயிகள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் கொள்கைகளின் தேர்தல் என்றும் தேர்தல் 2 கோடீஸ்வரர்களுக்கும் ஏழைக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்றார். மும்பை தங்களின் கைக்கு வர வேண்டும் என்று கோடீஸ்வரர்கள் விரும்புவதாகவும் ஒரு கோடீஸ்வரருக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். குறிப்பாக தாராவி மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். மேலும் பேசிய அவர், “மகாராஷ்டிரா இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. தாராவியில் ஒருவர் (அதானிக்கு) மட்டுமே என பிரதமர் மோடி கூறி வருகிறார். தாராவி நிலம் அதானிக்கு தாரை வார்க்க முயற்சி நடந்து வருகிறது. மகாராஷ்ட்ராவில் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான பணி ஒப்பந்தங்கள் மறுக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் (குஜராத்) பிற மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன,” இவ்வாறு தெரிவித்தார்.

The post மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் 2 கோடீஸ்வரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Maratha Assembly Election 2 ,Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,Opposition ,Maratha Legislative Assembly Election 2 ,Mumbai ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...