×

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு குழு அமைத்தது. சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்து வரப்பட்டது. புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு அக்.1ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், சென்னை காவல் துறை இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

* சிபிஐ., வசம் ஒப்படைக்கப்பட்டால் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் கூட, வழக்கு முடிய ஆகலாம். காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தலாம்.

* அண்ணாநகர் நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விவகாரத்தை நீதிமன்றம் கண்காணிக்கும். டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான குழு விசாரிக்கும்.

* சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.

* சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தலைமை நீதிபதி முன்பு சமர்பிக்க வேண்டும்.

* அறிக்கை அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கிற்கான சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும்.

* விசாரிக்க அமைக்கப்படும் அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும்

* வழக்கு செலவுக்காக ரூ.50,000, இதர செலவுக்காக ரூ.25,000 சிறுமியின் தாய்க்கு தமிழக அரசு வழங்க வேண்டும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Anna ,Nagar ,Delhi ,Anna Nagar ,Anna, Chennai ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...