×

திருவெறும்பூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

 

திருவெறும்பூர், நவ.18: திருவெறும்பூர் அருகே தாயை தாக்கிய மகனை தட்டி கேட்ட உறவினரை அரிவாளால் வெட்டிய உறவினரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் ம.மணிகண்டன் (29) இவர் குடிபோதையில் தனது தாயை தாக்கியுள்ளார். அப்பொழுது அவர்களது உறவினரான உதயகுமாரின் மகன் மணிகண்டன் (28) என்பவர் ஏன் உனது தாயை அடிக்கிறாய் என கேட்டுள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ம.மணிகண்டன், தட்டிக்கேட்ட மணிகண்டனின் தலை, காது ஆகிய பகுதியில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குறித்து மணிகண்டன் நவல்பட்டு போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் ம.மணிகண்டனை போலீசார் கைது செய்துதிருச்சி 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post திருவெறும்பூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Scythe ,Tiruverumpur ,Thiruverumpur ,M.Manikandan ,Nawalpattu Anna Nagar Ceylon Colony ,
× RELATED களத்தில் நிற்கிறோம் வலைதளத்தில் அல்ல.. அன்பில் மகேஷ் பேட்டி