- கிராமக் குழுக்கள்
- சேலம், நாமக்கல்
- காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தக்காய்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கை : நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தலைமையில் துவங்கப்பட்ட மாவட்ட வாரியான காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமானது தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் முடிவடைந்தது.
மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணத்தின் மையக் கருத்து என்னவென்றால், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து, பலப்படுத்துவது ஆகும். இதை நிறைவேற்றுவதன் முதற்படியாக, கிராம கமிட்டிகளை முழுமையாக கட்டமைக்கும் பணியை முன்மாதிரி முயற்சியாக கொண்டு சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த 15 தினங்களுக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம கமிட்டிகளை அமைத்து வார்டு மற்றும் வாக்குச்சாவடிகளில் தகுதியான நபர்களை அடிப்படை கமிட்டி நிர்வாகிகளாக நியமிக்கும் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
The post கிராம கமிட்டிகளை முழுமையாக கட்டமைக்கும் பணி முதற்கட்டமாக சேலம், நாமக்கலில் துவக்கம்: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.