×

லா லிகா கால்பந்து கார்டிசை வீழ்த்தியது செவில்லா

கார்டிஸ்: ஸ்பெயினின் கார்டிஸ் நகரில் நேற்று நடந்த லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் செவில்லா அணி, கார்டிஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.ஐரோப்பிய கோப்பையின் ஒரு அங்கமான லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடந்து வருகின்றன. ரியல் மாட்ரிட், செவில்லா, பார்சிலோனா உட்பட 20 கிளப்கள் இந்த தொடரில் மோதிக் கொண்டிருக்கின்றன. கோவிட், ஒமிக்ரான் அச்சுறுத்தல்களுக்கு நடுவே 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீரர்களில் சிலர், போட்டி நிர்வாகிகளில் சிலர் கொரோனா தொற்றால் அவ்வப்போது பாதிக்கப்படுவதால், ஒரு சில போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.இருப்பினும் செவில்லா மற்றும் கார்டிஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, அறிவிக்கப்பட்டபடி இன்று அதிகாலை நடந்தது. கார்டிஸ் நகரில் உள்ள எஸ்டார்டியோ நியூவில்லா மிராண்டில்லா ஸ்டேடியத்தில் இப்போட்டி நடந்தது. முதல் பாதியில் வலிமையான செவில்லா அணிக்கு, இணையாக கார்டிஸ் அணியின் வீரர்களும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இருந்தது. முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடவில்லை.இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியதும், 58வது நிமிடத்தில் செவில்லாவின் முன்கள வீரர் லூகாஸ் ஒகம்போஸ், கார்டிஸ் அணியின் தடுப்புகளை உடைத்து பந்தை கடத்தி வந்து, அற்புதமாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இறுதியில் இப்போட்டியில் செவில்லா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கார்டிஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் செவில்லா அணி, பட்டியலில் 2ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்த அணி இதுவரை 19 போட்டிகளில் ஆடி, அவற்றில் 12 வெற்றிகளை பெற்றுள்ளது. கார்டிஸ் அணி, 19 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பட்டியலில் 19ம் இடத்தில் உள்ளது….

The post லா லிகா கால்பந்து கார்டிசை வீழ்த்தியது செவில்லா appeared first on Dinakaran.

Tags : La Liga Football ,Sevilla ,Cartiz ,CARTIS ,La Liga ,Cortís, Spain ,Cordís ,Football ,Cartisan ,Dinakaran ,
× RELATED பில்லி ஜீன் கிங் கோப்பை: கனடா சாம்பியன்