×
Saravana Stores

மதுராந்தகத்தில் இன்று கனமழை: புளியமரம் விழுந்து வீட்டின் மேற்கூரை சேதம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மதுராந்தகம் அருகே மாம்பாக்கம் பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரம், அருகில் உள்ள மகேந்திரன் என்பவரின் வீட்டின்மீது இன்று காலை திடீரென முறிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் பலத்த சேதமடைந்தது. மேலும், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின்மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில், அந்த மின்கம்பம் உடைந்து நொறுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்தனர். அங்கு மகேந்திரனின் வீட்டு மேற்கூரைமீது முறிந்து விழுந்த புளியமரத்தை அறுவை இயந்திரத்தின் மூலமாக நகராட்சி ஊழியர்கள் முழுவதுமாக வெட்டி அகற்றினர். இதேபோல் அப்பகுதி நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு புளியமரம், 3 பனைமரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதன் அருகிலேயே மின்மாற்றி இயங்கி வருகிறது. இதன்மீது அந்த மரங்கள் முறிந்து விழுவதற்கு, அவற்றை பாதுகாப்பாக வெட்டி அகற்ற வேண்டும். மகேந்திரனின் வீட்டை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மதுராந்தகத்தில் இன்று கனமழை: புளியமரம் விழுந்து வீட்டின் மேற்கூரை சேதம் appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Madhurandakam ,Madurandakam ,Chengalpattu district ,Mambakkam ,Mahendran ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்