×

அரசுபள்ளியில் குழந்தைகள் தினவிழா

 

திருத்துறைப்பூண்டி, நவ. 16: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர் கர்ணன் வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராவுத்தர் அப்பா, கல்வி மேலாண்மை குழு தலைவர் ரேகா முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி எல்.ஐ.சி., கிளை மேலாளர் மாறன் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியை விஜயா நன்றி கூறினார்.

The post அரசுபள்ளியில் குழந்தைகள் தினவிழா appeared first on Dinakaran.

Tags : Children's day ,Thirutharapoondi ,Day ,Katimedu ,Panchayat Union Primary School ,Tiruthurapoondi, Tiruvarur District ,Headmistress ,Rajeshwari ,Teacher ,Karnan ,Parent Teacher Association ,President ,Rauthar ,Children's Day Celebration ,
× RELATED 20ம் ஆண்டு நினைவு தினம் : சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி!!