×

புதிய பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

 

சேலம், நவ.17: சேலம் பொன்னம்மாப்பேட்டை கோபால் செட்டித்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். தறித்ெதாழிலாளி. இவரது மனைவி சாந்தி(55). இவரது உறவினருக்கு கோவையில் நடக்கும் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கணவர் மோகன்ராஜ் சென்றுவிட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சாந்தி வீட்டில் இருந்தார்.

அவருக்கு கோவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, தனது மருமகனுடன் கோவைக்கு புறப்பட்டார். நேற்று பகல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தார். அப்போது சாந்தி திடீரென மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், பள்ளப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதிய பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mohanraj ,Gopal Chettitheru ,Ponnammapet ,Shanti ,Coimbatore ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...