×

பம்பையில் மகர ஜோதியை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை

திருவனந்தபுரம்: இந்தாண்டு பம்பை ஹில்டாப் பகுதியில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்து வரும் மகரவிளக்கு கால பூஜைகள், வரும் 14ம் தேதி நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. 11ம் தேதி பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படும். 14ம் தேதி மாலையில் இந்த திருவாபரணம் சன்னிதானத்தை அடைகிறது. அதன் பிறகு ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இதை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள்.மகரஜோதியை தரிசிப்பதற்காக சன்னிதானம், பம்பை, புல்மேடு உள்பட பல்வேறு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்தப்படும். பம்பையில் மிக உயரமான ஹில்டாப் பகுதியில் பக்தர்களுக்கு மகரஜோதி தரிசிக்க வசதி உண்டு. ஆனால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை காரணமாக இப்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதனால் அனுமதி அளிக்கப்படவில்லை.இந்நிலையில் இந்தாண்டு பம்பை ஹில்டாப் பகுதியில் மகர ஜோதியை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதேபோல இடுக்கி மாவட்டத்திலுள்ள புலிமேடு, பாஞ்சாலி மேடு, பருந்தும்பாறை ஆகிய இடங்களிலும் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் எருமேலி வழியாக செல்லும் பெரியபாதை கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்தது. 35 கிமீ உள்ள இந்த பாதையில் 25 கி.மீட்டருக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியாகும். இவ்வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த பாதை சீரமைக்கப்பட்டு கடந்த வாரம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிக்கல் காவு வழியாக அதிகாலை 5.30 மணி முதல், முற்பகல் 11.30 மணி வரை செல்லலாம். அழுதக்கடவு, முக்குழி ஆகிய பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது….

The post பம்பையில் மகர ஜோதியை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bambai ,Thiruvidangur Debutham Board ,Thiruvananthapuram ,Thiruvidanthapuram Board ,Maharajothy ,Hindu Bombai Hiltop ,Sabarimalai ,Makar Torch ,Bamba ,Thiruvidangur Depreasam ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!