- இசி
- JPNatta
- கார்கே
- புது தில்லி
- மகாராஷ்டிரா
- ஜார்க்கண்ட்
- காங்கிரஸ்
- தேர்தல் ஆணையம்
- பாஜக
- ஜேபி நட்டா,
- தின மலர்
புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை பாஜ மீறியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. அதே போல் காங்கிரஸ் மீதும் பாஜ புகார் அளித்துள்ளது. இந்த புகார்கள் குறித்து பதிலளிக்கும்படி பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியே கடிதம் எழுதியுள்ளது.
அந்த கட்சிகள் தெரிவித்துள்ள புகார்களையும் அனுப்பி நாளை மதியம் 1 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.மேலும்,மக்களவை தேர்தலின் போது நட்சத்திர பிரசாரகர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டங்களில் பேசும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதை முறையாக பின்பற்ற வேண்டும் என கடிதத்தில் நினைவூட்டியுள்ளது.
The post தேர்தல் விதிமீறல்கள் புகார்; ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.