×
Saravana Stores

மீனவர் பிரச்சனைக்கு பேச்சு நடத்தி தீர்வு: ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியன்

சென்னை: மீனவர் பிரச்சனைக்கு இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இரண்டுமே நட்பு நாடுகள்; எனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனைக்கு உடனே தீர்வு; கடல் எல்லை பிரச்சனை குறித்து தமிழ்நாடு மீனவர்கள் கவலைப்பட வேண்டாம்; அதை இந்திய அரசு பார்த்துக் கொள்ளும். தமிழ்நாடு மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் கேட்டறிந்துள்ளோம்; விரைவில் அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று கூறினார்.

The post மீனவர் பிரச்சனைக்கு பேச்சு நடத்தி தீர்வு: ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியன் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,George Gurion ,Chennai ,George Kurien ,India ,Sri Lanka ,
× RELATED தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்