×

எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து; 2 நாட்கள் சீல் வைக்கவும் முடிவு

சென்னை : சென்னை அருகே வீட்டில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன உரிமம் ரத்து செய்யப்பட்டது. தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த மருந்து வைக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டதால் அதிலிருந்து பரவிய நெடியால் 2 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். ஏ.சி. அறையில் எலித் தொல்லைக்காக வைத்த மாத்திரையில் இருந்து பரவிய நெடியால் கடந்த 14-ம் தேதி 2 குழந்தைகள் உயிரிழந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக குன்றத்தூரில் எலி மருந்தால் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் Unique பெஸ்ட் கன்ட்ரோல் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அறைகளில் எலி மருந்தை வைக்கும்படி தவறாக வழிகாட்டுதல் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 நாட்களில் அந்நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.

The post எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து; 2 நாட்கள் சீல் வைக்கவும் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kunradhur ,Dinakaran ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...