×
Saravana Stores

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

*விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்

கலசபாக்கம் : ஐப்பசி பவுர்ணமியையொட்டி 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் வழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் நந்தி வடிவமான பர்வத மலை மீது அமைந்துள்ளது.

சித்தர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இன்றும் காட்சி தரும் பர்வத மலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாட்களில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் மலையேறி சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இதனால் ஏராளமான தம்பதியர் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் மலையேறி சென்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். கரடு முரடான பாறைகள், ஏணிப்படி ஆகாயப் படி, கடபாரை என செங்குத்தான படிகளை கடந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட மலையடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் பக்தர்களின் கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டது. மலை அடிவாரத்தில் காவல்துறை வனத்துறை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என்று பரிசோதனை செய்து பின்னர் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை முதல் இன்று விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Parvathamalai ,Aippasi ,Vidiya Vidya Swami ,Kalasapakkam ,Vidya Swami ,South Mahadeva Mangalam ,
× RELATED சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு