×
Saravana Stores

கூத்தநல்லூர் நகராட்சியில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு தடை

 

மன்னார்குடி, நவ. 16: கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கூத்தாநல்லூர் நகரத்திலிருந்து வரும் 24 வார்டுகளில் சேகரமாகும் ‘மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடை’ செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை மீறி எவரேனும் செயல்பட்டால் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

மேலும், தங்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனத்தில் நச்சு தொட்டி சுத்தம் செய்ய நகராட்சி கழிவுநீர் வாகனம் அல்லது நகராட்சியில் உரிமம் வழங்கப்பட்ட தனியார் வாகனம் மூலம் மட்டுமே நச்சு தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். உரிமம் பெறாத வாகன மூலம் நச்சு தொட்டி சுத்தம் செய்தால் ‘மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுதல் தடை சட்டம்’- 2013-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி தெரிவித்துள்ளார்.

 

The post கூத்தநல்லூர் நகராட்சியில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Koothanallur Municipality ,Mannargudi ,Koothanallur ,Municipal Commissioner ,Krithika Jyoti ,Dinakaran ,
× RELATED மழையால் திருவாரூரில் 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்..!!