×

வழிப்பறி வழக்கில் ஜாமீனில் வந்து மீண்டும் ஆஜராகாத வாலிபர் கைது

சேலம், நவ.16: சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் மோகன் (40). இவர் கடந்த 2009ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருந்தே மோகன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடிக்க வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து உதவி கமிஷனர் பரவாசுதேவன் தனிப்படை அமைத்தார். இந்நிலையில் அன்னதானப்பட்டி எஸ்ஐ வெற்றி, 5ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுமுன்தினம் மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

The post வழிப்பறி வழக்கில் ஜாமீனில் வந்து மீண்டும் ஆஜராகாத வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Mohan ,Salem Kalambati ,Annanapatti police ,Salem Court ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...