×

மண்டல மற்றும் மகரஜோதி முன்னிட்டு தக்கோலம் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 67 பேர் சபரிமலை பயணம்

அரக்கோணம்: மண்டல மற்றும் மகரஜோதி முன்னிட்டு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 67பேர் இன்று காலை சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர ஜோதி சிறப்பு பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்பட்டது. நாளை கார்த்திகை மாதம் பிறப்பு என்பதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளனர்.

இதையொட்டி கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்காக தேவஸ்தான போர்டு மற்றும் கேரள மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கேரள மாநில அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதின்பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ்குமார் உத்தரவின்பேரில், துணை கமாண்டன்ட் சங்கர்பாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெ.கே.மண்டல் தலைமையில் 67 வீரர்கள் 2 குழுக்களாக சபரிமலைக்கு இன்று அதிகாலை புறப்பட்டு சென்றனர்.

மருத்துவ முதலுதவி சிகிச்சை கருவிகள், மரம் வெட்டும் கருவிகள், ரப்பர் படகுகள், லைப் பாய், கயிறுகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை எடுத்து உடன் எடுத்துச்சென்றனர். இதில் ஒரு குழுவினர் பம்பை நதிக்கரையிலும், மற்றொரு குழுவினர் ஐயப்பன் கோயில் சன்னிதானம் பகுதியிலும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதேபோல் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டு வளாகத்தில் இருந்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பத்தினம்திட்டா மாவட்ட பேரிடர் மேலாண்மையுடன் 24மணிநேரமும் தொடர்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மண்டல மற்றும் மகரஜோதி முன்னிட்டு தக்கோலம் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 67 பேர் சபரிமலை பயணம் appeared first on Dinakaran.

Tags : Mandala ,Maharajoti ,Thakolam Disaster Rescue Force ,Sabarimala ,Arakkonam ,National Disaster Rescue Force ,Makara ,Jyoti Special Pooja ,Sabarimala Aiyappan Temple ,Kerala ,Dinakaran ,
× RELATED சபரிமலை மண்டல பூஜையில் 32 லட்சம் பேர் தரிசனம்: ரூ.297 கோடி வருவாய்