×

தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள்: வரும் 17ம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: 17ம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது.

இந்த நிலையில், பராமரிப்பு பணி காரணமாக வரும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே, வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காஞ்சி, திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில் கள் அட்டவணைப்படி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள்: வரும் 17ம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tambarat ,Chennai Suburban Electric Train Service ,17th ,Chennai ,train service ,Tambaram ,Change in Chennai Suburban Electric Train Service ,
× RELATED தாம்பரத்திலுள்ள அரசு நெஞ்சக நோய்...