×
Saravana Stores

ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடனும் பேச சி.வி.சண்முகத்துக்கு அறிவுறுத்தல்

சென்னை: ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடனும் பேச அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் கோலியனூரில் செப். 2023-ல் நடந்த அதிமுக கண்டன கூட்டத்தில் முதல்வர் பற்றி தரக்குறைவாக பேசியதாக அரசு தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது. கண்ணியத்தோடு பேச வேண்டும்; அந்தக் காலம் கிடையாது; அடுத்த தலைமுறை பார்த்துக் கொண்டு உள்ளனர். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமைதான்; ஆனால் அதில் கண்ணியம் தேவை. மனுதாரர் சி.வி.சண்முகம் சாதாரண ஆள் போல பேசக்கூடாது, அவர் சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர். சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக ஏற்கெனவே 3 வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை நவ.22-க்கு ஒத்திவைத்தார்

The post ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடனும் பேச சி.வி.சண்முகத்துக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CV ,Shanmugam ,Chennai ,Chennai High Court ,AIADMK ,minister ,CV Shanmugam ,Villupuram ,Kolyanur Sep. Libel ,Villupuram court ,chief minister ,2023 AIADMK ,Shanmughat ,Dinakaran ,
× RELATED ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது...