×

பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்

திம்பு: அஜித் தற்போது நேபாளத்திலிருந்து பூடான் நாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு அவர் இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களுடன் இணைந்து எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பூடான் நாட்டில் அஜித் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரது தீவிர ரசிகர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ரசிகர் எதிரே வந்த லாரியை கவனிக்காமல் வந்ததை அடுத்து அஜித் அவருக்கு லாரி வருவதை சைகை மூலம் காட்டினார்.

இதனை அடுத்து அந்த ரசிகர் சுதாரித்து விபத்தில் இருந்து தப்பினார். இதனால் அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித்தின் மனிதாபிமானம் குறித்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் அந்த ரசிகருடன் இணைந்து அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

The post பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகரின் உயிரை காப்பாற்றிய அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajit ,Bhutan ,Nepal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலே மனுத்தாக்கல்