×
Saravana Stores

கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: வேலைநிறுத்ததால் போதிய மருத்துவர்கள் இல்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: பித்தப்பையில் கல் இருந்தது தொடர்பாக கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (32) என்ற இளைஞர் நேற்று முன்தினம் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வயிறுவலி காரணமாக சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது பித்தப்பையில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக ஏற்கனவே விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு அதிக கட்டணம் கேட்டதாகவும், அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் விக்னேஷின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் எமர்ஜென்சி வார்டு எனப்படும் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவரது உறவினர்கள் இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். இதே மருத்துவமனையில் நேற்று முன்தினம் தான் மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது. இதனால் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவே உரிய சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இளைஞர் உயிரிழந்து விட்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

The post கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: வேலைநிறுத்ததால் போதிய மருத்துவர்கள் இல்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kindi Pannoku Hospital ,CHENNAI ,Vignesh ,Perumbakkam ,Dinakaran ,
× RELATED தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால்...