×

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை

நாமக்கல்: நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஆஞ்சநேயருக்கு நேற்று 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தி பெருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கலெக்டர் ஸ்ரேயாசிங், கோயில் உதவி ஆணையர் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணிக்கு, தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜெயந்தி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 2 டன் பூக்களால் அலங்கரிக்கபட்டிருந்தது….

The post அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Anjaneya ,Hanuman Jayanti ,Hanuman Jayanti festival ,Anjaneyar ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு