×
Saravana Stores

கோவாவில் அரசு நியமனங்களில் மிக பெரிய ஊழல்: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க காங்கிரஸ் கோரிக்கை

பனாஜி: கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது.அரசின் வேலை வாய்ப்பு நியமனங்களில் ஊழல் நடந்துள்ளது என்றும் பணம் கொடுத்தால் தான் அரசு வேலை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் பட்கர் கூறுகையில்,‘‘ மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்டவர்களுக்கு பாஜவுடன் தொடர்பு உள்ளது. அரசு வேலை தருவதற்காக பணம் வாங்கியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். கடந்த 12 வருட பாஜ ஆட்சியில் அரசு பதவிகளை விலைக்கு விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் அலோக் சர்மா,‘‘2019ம் ஆண்டுக்கு பிறகு நடந்த வேலைவாய்ப்பு நியமனங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மபியில் நடந்த வியாபம் ஊழல் போல் கோவாவிலும் பெரிய ஊழல் நடந்துள்ளது’’ என்றார்.

The post கோவாவில் அரசு நியமனங்களில் மிக பெரிய ஊழல்: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Special Investigation Committee ,Panaji ,BJP government ,Goa ,Chief Minister ,Pramod Sawant ,State Congress Committee… ,Dinakaran ,
× RELATED இமாச்சல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு