×
Saravana Stores

பிறரின் வங்கி கணக்கை பயன்படுத்தி ரூ.100 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: மகாராஷ்டிரா, குஜராத்தில் ஈடி சோதனை

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாலேகானை சேர்ந்த வியாபாரி ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ₹100 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாலேகானை சேர்ந்தவர் சிராஜ் அகமது. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து குளிர்பான பொருட்கள் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் நாசிக்கில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் மக்காசோளம் தொழில் தொடங்கப்போவதாக கூறி பல்வேறு நபர்களின் கேஒய்சி ஆவணங்கள் மூலம் 14 வங்கி கணக்குகள் தொடங்கியுள்ளார். அதன் மூலம் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் ₹100 கோடிக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாலேகான், நாசிக், மும்பை, குஜராத்தில் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடத்தினர்.

அதில், 170 வங்கி கிளைகள் மூலம் 2500 க்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இந்த பணம் நிறுவனங்களின் முதலீட்டை பொதுமக்கள் வங்கி கணக்கில் செலுத்தி பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க இந்த முறையை பயன்படுத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட சிராஜ் அகமதுவை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிறரின் வங்கி கணக்கை பயன்படுத்தி ரூ.100 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: மகாராஷ்டிரா, குஜராத்தில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Maharashtra, Gujarat ,MUMBAI ,Maharashtra ,Malegaon ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை போலீஸ் வழக்குபதிவு