×

கவினுக்கு ஜோடியாகும் பிரீத்தி அஸ்ரானி

சென்னை: கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க உள்ளார். டாடா படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார் கவின். இவர் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தாராம். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்கவில்லை. இதையடுத்து இப்போது அந்த கேரக்டரில் கவின் நடிக்கிறார். இந்த படத்துக்கான தலைப்பு மிஷ்கினிடம் இருந்துள்ளது. தனது படத்துக்கு அந்த தலைப்பை வைக்க மிஷ்கின் யோசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ் கேட்டுள்ளதால் அந்த தலைப்பை விட்டுக்கொடுக்க மிஷ்கின் ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து தலைப்பு என்ன என்பது விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து இளன் இயக்கும் படத்தில் கவின் நடிக்க உள்ளார். ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் பியார் பிரேமா காதல் படத்தை இளன் இயக்கியிருந்தார். இப்போது அவர் தனது இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார். இதில்தான் கவின் ஹீரோவாக நடிக்க தேர்வாகியுள்ளார். இதில் ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது.

The post கவினுக்கு ஜோடியாகும் பிரீத்தி அஸ்ரானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Preeti Asrani ,Kavin ,Chennai ,Gavin ,Satish ,Dhanush ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!