×

தெ.ஆவுடன் கடைசி டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இன்று கடைசி போட்டி

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா டி20 கிரிக்கெட் அணிகள் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவும், கெபராவில் நடந்த 2வது ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும் வெற்றிப் பெற்றன. ஆளுக்கொரு வெற்றியுடன் 1-1 என சமநிலையில் இருந்தன. தொடர்ந்து டர்பனில் நடந்த 3வது ஆட்டத்தில் இந்தியா வெற்றிப் பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

அதே உற்சாகத்துடன் ஜோகன்ஸ்பர்க்கில் இன்று நடைபெற உள்ள 4வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் ெத.ஆ அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் வெல்வதின் மூலம் சூரியகுமார் தலைமையிலான இந்தியா 3-1 என்ற கணக்கில் ஹாட்ரிக் தொடரை வெல்லும். ஒருவேளை அய்டன் மார்க்ரம் தலைமையிலான தெ.ஆ வெல்ல நேர்ந்தாலும் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும்.

கூடவே இரு அணியிலும் அதிரடி அனுபவ, இளம் வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் வெற்றிக்கு இரு அணிகளும் மல்லுக் கட்டும். ஆனால் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ஒரு தொடரைக் கூட இந்தியா இழக்கவில்லை. அந்த பெருமையை நடப்பு சாம்பியன் இந்தியா தக்க வைக்க கூடுதல் வேகம் காட்டும்.

‘தில்’ திலக்
தெ.ஆவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் தனது முதல் டி20 சதத்தை விளாசினார் ஆந்திராவைச் சேர்ந்த திலக் வர்மா(22). ஆட்டத்தின் கடைசி ஓவரில் யென்சன் விளாசிய சிக்சரை கேட்ச் பிடிக்க முயன்றதில் திலக் தலையில் அடிப்பட்டது. ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக், ‘ பந்து வந்த திசையில் விளக்கு வெளிச்சம் இருந்ததால் கேட்ச் பிடிக்க முடியவில்லை. அது வருத்தம் தான். காயத்தால் ஒன்றும் பிரச்னையில்லை. சதம் விளாசியது மிகவும் மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது எனது கனவு. கூடவே சதம் விளாச இதுதான் சரியான நேரம். இந்த எல்லா பெருமையும் கேப்டனுக்குதான்் சேரும். என்னை 3வதாக களம் இறங்க வாய்ப்பு தந்த அவருக்கு நன்றி. அபிஷேக் ஆட்டமிழந்த போது எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது. நல்ல இணைக்காக காத்திருந்தேன். ஆனால் அப்படி அமையவில்லை என்றதும் ்நீண்ட நேரம் பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன். நான் என் தகுதியை நம்புகிறேன். கூடவே அணி நிர்வாகத்தின் ஆதரவும் வீரர்களுக்கு முழுமையாக இருக்கிறது’ என்றார்.

கோஹ்லியை முந்த வேண்டாம்
டி20 ஆட்டங்களில் அதிகமுறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 3வது இடத்தில்(6முறை) இருக்கிறார். இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் சதம் விளாசிய சஞ்சு, அடுத்த 2 ஆட்டங்களிலும் டக் அவுட்டாகி உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஒரு வேளை டக் அவுட் ஆனால் 7 முறை டக் அவுட்டாகி கோஹ்லியின்(125 ஆட்டங்கள்) சாதனையை, சஞ்சு(36ஆட்டங்கள்) சமன் செய்வார். முதல் இடத்தில் உள்ள ரோகித் சர்மா 12 முறை டக் அவுட்டாகி இருக்கிறார்.

The post தெ.ஆவுடன் கடைசி டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இன்று கடைசி போட்டி appeared first on Dinakaran.

Tags : India ,T20I ,South Africa ,Johannesburg ,T20 ,Durban ,Kebera ,T.A. ,Dinakaran ,
× RELATED 2வது டி20 போட்டியில் பாக்.,கை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்கா அணி