×

குப்பை கிடங்கு நிரம்பியதால் சாலைகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பச்சையம்மாள் நகர் பகுதியில், நகராட்சி சார்பில், குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் இருந்து சேகரிக்கும் குப்பைகளை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கொட்டுவது வழக்கம். ஆனால், சேகரித்து வரும் குப்பைகளை கிடங்கினுள் கொட்டாமல், வெளியே சாலைகளின் இருபறமும் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இது குறித்து, அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களிடம் கேட்டபோது, குப்பை கிடங்கு முழுவதும் நிரம்பி மலைபோல் உள்ளது. இதில் ஏறி நாங்கள் எப்படி குப்பைகளை கொட்டமுடியும் என, அவர்கள் சொன்னார்கள். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம், சாலைகளில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு, ஏற்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளோம். எனவே, இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர்….

The post குப்பை கிடங்கு நிரம்பியதால் சாலைகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Pachaiammal Nagar ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...