×

கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது : ஐகோர்ட் கருத்து

சென்னை : சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் என்ன? என்று விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அக்.4-ல் மாநிலக் கல்லூரி மாணவர்
சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார்.தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமாணவர் சுந்தர் அக்.6-ல் மரணம் அடைந்தார்.இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவர்களின் பெற்றோர்கள் ஆஜராகி இருந்தனர்.

அப்போது காவல்துறை தரப்பில், கைதான மாணவர்கள் ஒரு பருவத்திற்கு 10க்கும் குறைவான நாட்களே கல்லூரிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கைதான மாணவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு நீதிபதி, “கொலையாளி குறித்து கவலைப்படுவோர்,கொலையான மாணவர் குடும்பம் பற்றி ஏன் கவலைப்படவில்லை?. வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க நிச்சயம் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரம் என்ன?. காவல்துறை, ரயில்வே போலீஸ் பதிவு செய்த வழக்குகள், அவற்றின் நிலை, சமரசமானவை பற்றிய விவரம் தர ஆணையிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

The post கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது : ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Sundar ,Central Railway Station ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...