×

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: வடைமாலை சாத்தி வழிபாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில், காஞ்சிபுரம் முத்தியால்பேட்டையில் பிரசன்ன ஆஞ்சநேயர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பின்புறமுள்ள 18 அடி பிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அருகில் உள்ள வீர ஆஞ்சநேயர், உத்திரமேரூர் அடுத்த மருதத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த சுயம்பு வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து வடை மாலை சாத்தியும், நெய்அபிஷேகம் செய்தும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த திம்மராஜபுரத்தில் கனயாழி ஆஞ்சநேயர், திருப்போரூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள புதுப் பாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர், கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி பக்த ஆஞ்சநேயர், மாமல்லபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர், செங்கல்பட்டு அடுத்த தேவனூர் ஆஞ்சநேயர், மதுராந்தகம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருப்போரூர்:  திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அனுமன் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர். அதேபோன்று கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் மலைக்கோயிலில் அனுமன் ெஜயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு சந்தனக்காப்பு உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 1008 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கேளம்பாக்கம், புதுப்பாக்கம், வெளிச்சை, மாம்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று அனுமனை வணங்கினர். செங்கல்பட்டு செல்லும் சாலையில் சிறுங்குன்றம் மலை மீது அமைந்துள்ள 23 அடி உயர அனுமன் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. திருப்போரூரை அடுத்துள்ள சிறுதாவூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை மிக்க ஆஞ்சநேயர் கோயிலில் 45ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது….

The post காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்: வடைமாலை சாத்தி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Anuman Jayanti Festival ,Kanji ,Chengalpattu ,Vadimalai Sathi Worship ,Kanchipuram ,Muthialpate Prasanna Anchenayer ,
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்