×

மாமல்லபுரம் கடற்கரையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடலில் குளித்தனர். இதனால், ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இனி வருகம் நாட்களில் பயணிகளை தடுக்க நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தொற்றை தடுக்க கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட தடை விதித்துள்ளது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. நேற்று, மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரைக்கு செல்ல முயன்றனர். மாமல்லபுரம் போலீசார் கடற்கரைக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பயணிகளை திருப்பி அனுப்பினர். ஆனால், சுற்றுலா பயணிகள் தடையை மீறி மீனவ குப்பம் வழியாக கடற்கரைக்கு சென்று ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர். மேலும், ஒரு சில பயணிகள் போலீசார் பார்வையில் படாமல் தடுப்புகளை தாண்டி குதித்து கடற்கரைக்கு சென்றனர்.நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலாப் பயணிகள் யாரும் முக கவசம் அணியாமல் பல்வேறு தெருக்களில் சுற்றித்திரிவதால் ஒமிக்ரான் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம் முககவசம் அணியாமல் வரும் பயணிகளை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post மாமல்லபுரம் கடற்கரையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Mammallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...