×

தட்டார்மடம் அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல்

சாத்தான்குளம், நவ. 14: சாத்தான்குளம் அருகேயுள்ள கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருள் குணசேகர்(53) தொழிலாளி. கடந்த 6ம் தேதி இவர், வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் வசந்த் என்பவர், குணசேகர் வீட்டுமுன் நின்று கொண்டு அவதூறாக பேசினாராம். இதனை குணசேகர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த், குணசேகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் ஏட்டு சிவகுமாரி வழக்கு பதிவு செய்தார். எஸ்ஐ பொன்னு முனியசாமி மற்றும் போலீசார், வசந்தை தேடி வருகின்றனர்.

The post தட்டார்மடம் அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Tattarmadam ,Satankulam ,Arul Gunasekhar ,Kolnattatu ,Shekhar ,Vasanth ,Gunasekhar ,
× RELATED பேய்குளம், செங்குளம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை