×

வாட்ஸ் அப் குரூப் துவங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: கேரள டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

திருவனந்தபுரம்: கேரள தொழில்துறை இயக்குனராக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். 2013ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவரது சொந்த ஊர் நாமக்கல் ஆகும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் ‘மல்லு இந்து ஆபீசர்ஸ்’ என்ற பெயரில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அவர் முஸ்லிம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்காகவும் ஒரு தனி வாட்ஸ் ஆப் குரூப்பை தொடங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே தனக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்றும், தன்னுடைய போனை யாரோ ஹேக் செய்து வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கியதாகவும் கோபாலகிருஷ்ணன் கூறினார். ஆனால் விசாரணையில் அது பொய் என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் தொழில்துறை இயக்குனர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதேபோல கேரள கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்பட்ட புகாரில் ஐஏஎஸ் அதிகாரியான விவசாயத்துறை தனி செயலாளர் பிரசாந்தும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில்மத மோதலை ஏற்படுத்த முயற்சித்த ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் மீது வழக்குபதிவு செய்யக் கோரி கேரள டிஜிபியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post வாட்ஸ் அப் குரூப் துவங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: கேரள டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.

Tags : IAS ,Tamil Nadu ,WhatsApp ,Congress ,Kerala DGP ,Thiruvananthapuram ,Gopalakrishnan ,Kerala Industries ,Kerala ,Namakkal ,Mallu Hindu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு...