×
Saravana Stores

பாஜ ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் ஊழல் தலைவர்களை தலைகீழாக தொங்க விடுவோம்: அமித் ஷா ஆவேசம்

ஜாரியா: ஜார்க்கண்டில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த தலைவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக தெரிவித்தார்.

ஜார்க்கண்ட்டின் ஜாரியாவின் நிலக்கரி சுரங்க பகுதியில் நேற்று நடந்த பாஜ பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஊழலில் திளைத்துள்ளது. ஜார்க்கண்டில் பாஜ ஆட்சிக்கு வந்தால் நிலக்கரி ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் தடுத்து நிறுத்தப்படும். பின்னர் நிலக்கரி வணிகர்கள் அச்சப்பட தேவை இருக்காது. பொதுப்பணத்தை கொள்ளையடித்த ஊழல் தலைவர்கள் பாஜ ஆட்சியில் விடப்பட மாட்டார்கள். அவர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள்.

ஜார்க்கண்டில் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தருகிறார். ஜார்க்கண்டுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர் இங்குள்ள பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களின் நிலங்களை அபகரித்து கொள்கின்றனர். பாஜ ஆட்சி அமைத்த பிறகு ஊடுருவல்காரர்களுக்கு நிலம் மாற்றப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். ஊடுருவுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை விரட்டி அடிப்போம்” என்றார்.

The post பாஜ ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் ஊழல் தலைவர்களை தலைகீழாக தொங்க விடுவோம்: அமித் ஷா ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Bajaj ,Amit Shah ,Zaria ,Minister ,Union Interior Minister ,Jaria ,Dinakaran ,
× RELATED 2026க்குள் நக்சலைட் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: ஜார்க்கண்டில் அமித் ஷா உறுதி