×
Saravana Stores

விஐபி, ஏர்போர்ட் பாதுகாப்பிற்காக 1,025 பேர் கொண்ட சிஐஎஸ்எப் மகளிர் படை

புதுடெல்லி: விஐபி பாதுகாப்பு, விமானநிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக சிஐஎஸ்எப் படையில் 1025 பேர் கொண்ட பெண்கள் படை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் விஐபி பாதுகாப்பு, விமானநிலையங்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்களில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை கருத்தில் கொண்டு நாட்டிலேயே முதல்முறையாக முழுவதும் பெண்களால் ஆன சிஐஎஸ்எப் பட்டாலியனை உருவாக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த படையில் மூத்த கமாண்டன்ட் நிலை அதிகாரி முதல் மொத்தம் 1025 பெண் வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். தற்போது 1.80 லட்சமாக இருக்கும் சிஐஎஸ்எப் படையில் ஏழு சதவீதத்துக்கும் அதிகமான பெண் பணியாளர்கள் உள்ளனர்.

இதில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) முதல் அனைத்து மகளிர் ரிசர்வ் பட்டாலியனாக இந்த படை அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள 12 பட்டாலியன்களிலும் ஆண், பெண் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் பெண் படையில் முற்றிலும் பெண் வீராங்கனைகள் மட்டுமே இடம் பெற உள்ளனர்.

The post விஐபி, ஏர்போர்ட் பாதுகாப்பிற்காக 1,025 பேர் கொண்ட சிஐஎஸ்எப் மகளிர் படை appeared first on Dinakaran.

Tags : CISF women force ,NEW DELHI ,CISF ,Dinakaran ,
× RELATED புகை மண்டலமானது டெல்லியில் காற்று...