×

லாரி மோதி முட்டை வியாபாரி பலி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (55). இவர், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற கடைகளுக்கு முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாலாஜாபாத் பகுதியில் உள்ள கடைகளில் முட்டை வியாபாரம் செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு சொந்த ஊரான கிருஷ்ணாபுரத்திற்கு செல்வதற்காக தனது பைக்கில் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியை கடக்க முயன்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி, பைக் மீது மோதியது. இதில் கால், தலை என பல்வேறு பாகங்களில் பலத்த காயம் அடைந்த ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post லாரி மோதி முட்டை வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,Ramadas ,Krishnapuram Pilliyar Koil Street ,Angambakkam Panchayat ,Walajabad ,
× RELATED நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள்...